எரியுண்ட நிலையில் சடலம் மீட்பு தொடரும் மர்மங்கள்.
கொஹுவல - ஆசிரி மாவத்தையில் எரியுண்ட கார் ஒன்றில் இருந்து பகுதியளவில் எரிந்த நிலையில் 33 வயதான வர்த்தகர் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு 11.30 மணியளவில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கார் முழுவதுமாக தீக்கிரையாகியிருந்ததாகவும், மற்றும் உயிரிழந்த நபரின் சடலமும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
33 வயதுடைய கலுபோவில - பாத்திய மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment