பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு - இராணுவச் சிப்பாய் கைது.
ஹபரண - பொலன்னறுவ வீதியின் மின்னேரியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹபரண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 53 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸ்உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் இராணுவ வாகனம் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலன்னறுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இராணுவ வாகனத்தை செலுத்தி வந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment