கொழும்பு - டாம் வீதியில் தலை இல்லாமல் பயணப் பை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொழும்பு - டாம் வீதியில் தலை இல்லாமல் பயணப் பை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்றைய தினம் குறித்த பெண்ணின் டி.என்.ஏ பரிசோதனை வெளியானது. அதில் அவருடைய அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அவருக்கு நேற்றைய தினமே பிரேதபரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் நேற்று இரவு கையளிக்கப்பட்டது.
யாத்திரை செல்வதாக கூறிச்சென்ற குருவிட்ட பகுதியைச் சேர்ந்த பெண் தலை இல்லாமல் சடலமாக வீடு திரும்பியதைக் கண்டு வயோதிபத்தாய் சோகத்தில் மூழ்கியுள்ளார்.
இதேவேளை குறித்த பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment