Header Ads

test

விசேட அதிரடிப்படையினரின் சுற்றி வளைப்பிற்குள் சிக்கிய தேயிலை களஞ்சியசாலை.

 பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர் , 4 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கழிவுத் தேயிலையை குறித்த களஞ்சியசாலைக்கு கொண்டுவந்து, தூய தேயிலை என்ற போர்வையில் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தகவல் வெளியிட்டனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலைகளையும் , சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் பூண்டுலோயா பொலிஸாரிடம், விசேட அதிரடிப்படையினர் கையளித்தனர்.





No comments