நீதிமன்ற வழக்குகளின் சான்றுப்பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் இரு பொலிஸார் கைது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற வழக்குகளின் சான்றுப்பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தினை சேர்ந்த இருவர் உள்ளிட்ட முல்லைத்தீவினை சேர்ந்த பொதுமக்கள் இருவராக நால்வரை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இச்சம்பவம் 13.03.21 அன்று இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பழைய கட்டத்தில் வைக்கப்பட்ட வழக்குகளின் சான்றுப்பொருட்கள் திருடப்பட்டுள்ளமை இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு.இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் குறித்த கட்டத்தில் வைக்கப்பட்ட வழக்குகளின் சான்றுப்பொருட்கள் தொடர்பில் விபரங்களை பரீசீலனை செய்துகொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
Post a Comment