யாழின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் நேற்றும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கோட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளுநர்,..
இது வரை 499 தொற்றாளர்களாக இனம் காணப்பட்டு அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் தொடர்புடை சுமார் 1000 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு 1000 பீ.சி.ஆர் மாதிரிகள் கொழும்புக்கும் 1000 மாதிரிகள் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் நகரை அண்டியுள்ள பகுதிளிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கண்காணிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளதாவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
நகரை சூழவுள்ள பகுதிகளில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கவும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் பரவலை மேலும் கட்டுப்படுத்த சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அளுநர் பி.எம்.எஸ்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment