கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டநிலையில் அதில் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏ9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பாதசாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சி விவேகாநந்தாநகர் பகுதியை சேர்ந்த
செல்லப்பா சந்திரகுமார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment