Header Ads

test

தாயை கொலை செய்த மகன் தலைமறைவு.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம்  பி.கண்ணுக்கானூர் கிராமத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது தாயை தலைத்துண்டித்துக் கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபருக்கும் அவரது பெற்றோருக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள், தகராறுகள் ஏற்படுவதும் குறித்த நபர் பெற்றோரை தாக்குவதும் வழக்கமாகியுள்ளது.

இதன்படி வழமைப்போலவே சம்பவ தினத்தன்று பெற்றோருடன் ஏற்பட்ட தகராறின் போது இந்த நபர் தனது தாயை தாக்கிக் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார் எனவும் அவரை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு சந்தேகநபரையும் சேர்த்து 4 பிள்ளைகள் உள்ளனர்.

அத்துடன் சந்தேகநபரான மகன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

தரம் 10 வரை ஒழுங்காக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர் அதன் பின்னர் மனநல கோளாறினால் பாதிக்கப்பட்டு 4 வருடங்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது



No comments