கொழும்பு - டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பெண்ணை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரி கொண்டு சென்ற மற்றுமொரு பை தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவர் வீட்டுக்கு கொண்டு சென்ற குறித்த பை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் குறித்த பை களனி ஆற்றில் தூக்கி எறிந்தாரா என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, இன்று (04) பிற்பகல் 3.00 மணிக்கு குறித்த பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
களனி நதி கடலில் சேரும் மோதரை பகுதியில் இருந்து ஹங்வெல்ல பகுதி வரை தேடுதல் நடத்தப்பட உள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை இதுவரை கண்டுபிடிக்க முடியாததால், அவரின் சரியான அடையாளத்தை உறுதிப்படுத்த டி.என்.ஏ பரிசோதனைக்காக அவரது உறவினர்களிடமிருந்து மாதிரிகள் பெற நேற்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் குறித்த தலைப்பகுதி கிடைக்கும் வரை பிரேத பரிசோதனை நடத்தப்பட மாட்டாது என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
Post a Comment