காதல் மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தில் காதல் மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாகர்கோவிலின் வடக்கு சூரங்குடி வள்ளுவர்காலனியை சேர்ந்தவர் கதிரவன் (34). இவருக்கும் அஜிதா (32) என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு குழந்தை இல்லை.
இதன் காரணமாக தம்பதியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, அஜிதா வேறு ஒருவரை திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், கதிரவன் அதிர்ச்சியில் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று இரவு உறவினர் வீட்டுக்கு சென்ற கதிரவன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை கதிரவன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment