யாழ் நகரில் வீடொன்றுக்குள் நுழைந்து இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல்.
யாழ் நகரில் வீடொன்றுக்குள் நுழைந்து இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
யாழ் கஸ்தூரியார் வீதியிலுள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றிற்கு முன்பாக உள்ள வீடொன்றின் மீதே இத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வாள்கள் மற்றும் கத்திகளுடன் வந்த கும்பலொன்று வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த மோட்டார் வாகனம் உட்பட பல பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளது.
இதற்கும் மேலாக வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.
இதனால் அச்சமடைந்த வீட்டுக்காரர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே வேளை இனந்தெரியாத கும்பலின் தாக்குதல் நடத்திய வீட்டிற்கு யாழ் மாநகர முதல்வர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
Post a Comment