Header Ads

test

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள மகன்.

 நாவலப்பிட்டி பகுதியில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மகன் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகனுக்கும் தந்தைக்கும் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் போது மதுபோதையிலிருந்த மகன் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலிகுரூப் தோட்டத்தை சேர்ந்த 71 வயதுடைய சரவணமுத்து மகாமுனி என்பவரே 42 வயதுடைய மகனால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

கத்தி குத்துக்குள்ளான தந்தை அவ்விடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்த பொலிஸார், சடலம் நாவலப்பிட்டி நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தலைமறைவான நபரை கைது செய்ய நாவலப்பிட்டி மற்றும் குருந்துவத்தை பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரைணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.


No comments