Header Ads

test

கிளிநொச்சியில் பலர் கைது.

 கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 13.03.2021 தொடக்கம் 14.03.2021 வரையான 24 மணிநேர காலப்பகுதியில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்றத்தகவலுக்கமைய ஊரியான், முரசுமோட்டை, உமையாள்புரம் உருத்திரபுரம் , திருவையாறு , பகுதிகளில் கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் 8 உழவு இயந்திரங்களும்,9டிப்பர்களும் பொலிசாரல் பிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.



No comments