Header Ads

test

தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளன. கௌபி, பயறு, உ

இறக்குமதிக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளன.

கௌபி, பயறு, உளுந்து, குரக்கன் மற்றும் மஞ்சள் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயறுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ கிராம் மஞ்சளின் விலை 4 ,000 முதல் 5, 000 ரூபாவிற்கும் இடையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் ஒரு கிலோ கிராம் கௌபியின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோ கிராம் உளுந்து 1,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தைக்கு தேவையான அளவு உற்பத்தி பொருட்கள் கிடைக்காமை இந்த விலை அதிகரிப்பிற்கான காரணம் என அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



No comments