முல்லைத்தீவில் புதையுண்ட நிலையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட புதுமாத்தளன் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையா நிலத்தில் புதையுண்ட நிலையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் அனுடதியுடன் குறித்த பகுதியில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது ஆர்.பி.ஜி குண்டுகள் நான்கு, 60 எம்.எம். மோட்டார் நான்கு, 80 எம்.எம் மோட்டார் ஒன்று,தமிழன் குண்டு நான்கு, கைக்குண்டு மூன்று நிலக்கண்ணிவெடி ஒன்று உள்ளிட்ட வெடிபொருட்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இவை தகர்த்து அழிக்கப்படவுள்ளது.
Post a Comment