மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி - கிளிநொச்சியில் சம்பவம்.
புளியம்பொக்கணை கோவிலுக்குச் செல்ல வாகனம் கழுவிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் இன்று (28) அதிகாலை 7.30 மணி அளவில் தனது குடும்பத்தோடு புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்வதற்காக வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு இயந்திரத்தினால் கழுவி கொண்டிருக்கின்ற வேளையில்,
சுத்திகரிப்பு இயந்திரத்தின் மின் ஒலுக்கினால் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய இராசலிங்கம் ஜெயபாலன் என்ற நபரே மரணமடைந்துள்ளார்.
இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment