கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது.
கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று நள்ளிரவு மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட போதே இராணுவப் புலனாய்வாளர் மற்றும் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே கைது செய்யப்பட்டுள்ளனர்
இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் கருவி மற்றும் ஏனைய பொருட்கள் இவர்கள் பயணித்த மோட்டார் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
Post a Comment