Header Ads

test

தூக்கமாத்திரை வழங்கி பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளையிடும் சந்தேகநபர் ஒருவர் கைது.

 நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளில் பயணங்களை மேற்கொள்ளும் யுவதிகளுடன் நெருக்கமாக உரையாடி அவர்களுக்கு தூக்கமாத்திரை வழங்கி அவர்களின் பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளையிடும் சந்தேகநபர் ஒருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு காவல்துறை விசாரணை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் ராஜாங்கணை பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

பத்திரிகைகளில் வெளியாகும் திருமண விளம்பரங்களின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பை ஏற்படுத்துவது மற்றும் தூர பேருந்துகளில் பயணிக்கும் யுவதிகளுடன் நட்பாக நடந்து கொள்வதன் மூலம் அவர் இந்த கொள்ளை சம்பவத்தை முன்னெடுத்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments