காவல்துறை அதிகாரியை போல போலியாக தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவர் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினரால் கைது.
உப காவல்துறை பரிசோதகர் ஒருவரின் சீருடையை அணிந்து காவல்துறை அதிகாரியை போல போலியாக தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவர் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உப காவல்துறை பரிசோதகர் ஒருவரின் சீருடையை அணிந்து பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பன்னிப்பிட்டிய - பொல்வத்தை பிரதேசத்தில் மேல் மாகாண தெற்கு விசேட குற்ற விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இறக்குவானை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதானவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் சமூக வலைத்தளங்களிலும் தன்னை உப காவல்துறை பரிசோதகராக வெளிப்படுத்திக் கொண்டுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Post a Comment