கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சி - இந்தியா
கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அத்துடன், இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்விடயத்தில் தமிழகத்திற்கு சாதகமான நிலையே ஏற்படும்.இலங்கை அரசுடன் நமது வெளியுறவுத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆழ்கடல் மீன்பிடி திட்டமும், தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
Post a Comment