வேதன நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வரப்பிரசாதங்கள் கிடைக்காமல் போகும் - பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவிப்பு.
வேதன நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வரப்பிரசாதங்கள் கிடைக்காமல் போகும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதன் பேச்சாளர் ரொசான் ராஜதுரை இதனை தெரிவித்துள்ளார்.
வேதன நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை காலமும் பெருந்தோட்ட முதாலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நிலவிய கூட்டு ஒப்பந்த முறைமை இரத்தாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல நலன்புரி வசதிகளை இழக்க நேரிடும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொசான் ராஜதுரை குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்திருந்தார்.
இந்த புதிய தீர்மானத்தின்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக நாளாந்த வேதனமாக 900 ரூபாவும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி கொடுப்பனவாக 230 ரூபாவை பெருந்தோட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,230 ரூபாவாக வேதனம் அதிகரிக்கும்
முன்னரை விடவும் நாளாந்தம் 319 ரூபாய் வேதன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது
ஒட்டுமொத்த வேதனத்தில் இது 35 சதவீத அதிகரிப்பாகும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்
Post a Comment