மதுபானம் கொடுத்து பாடசாலை மாணவியை திருமணம் செய்ய முயன்ற மாணவன் பொலிசாரால் கைது.
பாடசாலை மாணவிக்கு மதுபானம் கொடுத்து, கடத்தி சென்று, திருமணம் செய்ய முயன்ற மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பென்தோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்ட குறித்த மாணவன், அப் பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலையொன்றின் உயர்தர மாணவனாவார்.
இந்நிலையில் அவர் சக மாணவியொருவரை 3 வருடங்களாக காதலிதது வந்த நிலையில் மாணவியை இரகசியமாக திருமணம் செய்ய விரும்பினார்.
அவர் மாணவியை திருமணத்திற்கு வற்புறுத்திய போதும், படித்து முடியும் வரை தன்னால் திருமணம் செய்ய முடியாதென மாணவி கூறிவிட்டார்.
இதேவேளை குறித்த மாணவியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்துவந்த நிலையில் அண்மையில் நாடு திரும்பி தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டு அவர் வீட்டுக்கு வந்தபோது, மகள் வீட்டிலிருக்கவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் தாயார் வீட்டுக்கு வந்த பின், வேறு யாருக்கும் மாணவியை திருமணம் முடித்து கொடுத்து விடுவார் என கருதிய காதலன், மாணவியை கடத்தி சென்றபோது, யத்ரன்முல்ல பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொலிசார் , மாணவியை மீட்டனர்.
குறித்த மாணவி மீட்கப்பட்ட போது, மதுபோதையில் சுயநினைவின்றி காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து காதலனை கைது செய்த பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், மாணவியை கடத்திச்சென்று செய்து திருமணம் செய்ய முயன்றமை தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Post a Comment