Header Ads

test

அதிகாலையில் திடீரென வெடிப்பு - உத்தரபிரதேசத்தில் சம்பவம்.

 உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள பூல்பாக் பகுதியில் பழமையான கட்டிடம் ஒன்றில் மருந்து கிடங்கு உள்ளது. ஓம் பிரகாஷ் சர்மா என்பவருக்கு சொந்தமான இந்த கட்டிடத்தில் ஏராளமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

இந்த கிடங்கில் நேற்று அதிகாலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் போது ராஜீவ் குமார் சர்மா என்பவர் அங்கு இருந்தார். இந்த வெடிவிபத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. அங்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

கியாஸ் சிலிண்டர் வெடித்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் மீரட்டில் நேற்று அதிகாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது



No comments