நாடாளுமன்றத்துக்கு படகு மூலமாக சென்ற
இலங்கை நாடாளுமன்றம் தியவன்னா ஓயாவுக்கு மத்தியில் அமைந்திருக்கின்றது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 2015ற்கு முன்னதாக நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கியபோது, அப்போது சபாநாயகராக இருந்த தற்போதைய இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு படகில் நாடாளுமன்றம் சென்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த வருடத்தில் இப்புதிய நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றபோது முதலாவது அமர்விற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே படகு மூலமாகவே வந்திருந்தார்.
அதேவேளை, நாடாளுமன்றப் பணியாளர்களை தெமட்டகொடவில் இருந்து படகு மூலமாகவே அழைத்து வருவதற்கான திட்டமும் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் மதுர வித்தானகே குறிப்பிட்டார்.
Post a Comment