மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி.
பிலியந்தலை பாசல் மாவத்தையில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலியாகி உள்ளார்.
இச் சம்பவத்தில் கண்டி, அலவத்துகொட மாருபனவில் பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர் மூன்று மாடி கட்டிடத்தை புனரமைத்துக்கொண்டிருக்கும்போது மாடியில் இருந்து விழுந்ததாகவும் இவருடன் மற்றுமொரு அதிகாரியும் இருந்ததாகவும் பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன.
Post a Comment