சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முற்பட்ட பொலிஸ் கான்ஸ்ரபிள் கைது.
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முற்பட்ட பொலிஸ் கான்ஸ்ரபிள் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருகோணமலை நிலாவெளி பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 35 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே கைது செய்யப்பட்டவராவார்.
சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment