முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவியை முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளுக்காக அழைப்பு.
சர்வதேச மகளிர் தினத்தை கறுப்பு நாளாக தெரிவித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று இந்த பேராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த வகையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரியை முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்.
அவரிடம் தற்போது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment