Header Ads

test

முல்லைத்தீவு மாவட்டம் வாவட்டி மலை வீதி ஒட்டிசுட்டான் பகுதி கூழாமுறிப்பில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் ஆலயத்திற்க்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

 முல்லைத்தீவு மாவட்டம் வாவட்டி மலை வீதி ஒட்டிசுட்டான் பகுதி கூழாமுறிப்பில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு இன்று அடியவர்கள் தொண்டர்கள் மற்றும் இவ் ஆலயத்தின் பிரதம குரு. சிவஸ்ரீ சிவாகம கிரியா திலகம் வை.கு.ஜெயசுதக்குருக்கள்

தலைமையில் ஆலய புணரமைப்பிற்க்கான அடிக்கல் நாட்டு விழா இடம் பெற்றது.

இது தொடர்பில் ஆலய பிரதம குரு கருத்து தெரிவிக்கையில் -

இவ் ஆலயமானது இவ் வீதியால் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் மற்றும் இக் கிராம மக்கள் போன்றவர்களின் நிதிப் பங்களிப்பில் ஆலய புணரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த ஆலயமானது சைவ சமயத்தவர்களின் வழிபாட்டிற்குரிய சிறந்த விநாயகர் ஆலயமாக பிரசித்தி பெற்று காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இவ் ஆலய நிர்மாண பணிகள் முடிவடைந்த பின்னர் சைவ சமயத்தை பின்பற்றும் அனைவருக்கும் சிவதீட்சை வழங்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் காலத்தில் முழுமையாக இந்து சமய வளர்ச்சிக்காக இவ் ஆலயம் செயற்படும் என மேலும் ஆலயத்தின் பிரதம குரு. சிவஸ்ரீ சிவாகம கிரியா திலகம் வை.கு.ஜெயசுதக்குருக்கள் தெரிவித்தார்.











No comments