திருட்டு சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் மூன்று சிறுவர்களைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆலய உண்டியல் திருட்டு சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் மூன்று சிறுவர்களைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆலயப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் காணப்பட்ட சிசிடிவி காணொளி காட்சிகளைச் சோதனையிட்ட பொலிஸார் குறித்த சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
14 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட சிலரே குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை சிசிடிவி ஊடாக அறிய முடிவதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment