ஆலயத்தில் கிணற்று நீர் பொங்கி வழிந்த அதிசயம் - மட்டக்களப்பில் சம்பவம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட மண்முனை மேற்கு பிரதேசத்தில் உள்ள அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்தில் அமையப்பெற்றிருக்கின்ற விக்னேஸ்வரர் ஆலயத்தில் (31) நேற்றைய தினம் கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெற்றுக்கொண்டிருந்து.
இந்த சமயம் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள அன்னை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆலய தீர்த்தக் கிணறு பெருக்கெடுத்து வழிந்த அதிசய நிகழ்வும் அரங்கேறியுள்ளது.
இவ் அற்புத நிகழ்வை பக்திப் பரவசத்துடன் அடியவர்கள் போற்றி வணங்கியதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக அந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கருத்து கூறுகின்றனர்.
Post a Comment