Header Ads

test

மஹர மல்வத்த வீதியில் வீடொன்றுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் காணப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம்.

 மஹர மல்வத்த வீதியில் வீடொன்றுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் காணப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் காணப்பட்டது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவ

வீதியில் சென்று கொண்டிருந்த இந்த இளைஞர், நெஞ்சுவலியால் அவதிப்பட்டவாறு நடந்துசெல்வதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.
அதன்பின்னர், அவர் வீதியின் அருகிலுள்ள கதிரையில் அமர்ந்தவாறே சிலநேரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளதாக சம்பவத்தை நேரில் அவதானித்த பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

கடவத்தை, கொபியாவத்தை பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவந்த 34 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்த இளைஞருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் முடிவு நாளைய தினம் கிடைக்கவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனைகளும் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக கடவத்தை காவல்நிலையத்தினர் தெரிவித்தனர்.



No comments