நாட்டில் நாளை முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனை தடை - சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவிப்பு.
நாட்டில் நாளை முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனை தடை செய்யப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும் குறைவான பொலித்தீன், பெட் போத்தல் (PET Bojttle) ,செம்போ பக்கெட், காட்டன் பட் மற்றும் காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் என்பன இவ்வாறு தடைசெய்யப்படவுள்ளது.
குறித்த பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் அதிகமானவை சூழலுடன் சேர்வதியால் இந்நாட்டில் அதிகமாக சூழல் மாசடைவு ஏற்படுவதுடன், குடிநீர் மற்றும் நீர் மாசடைவதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக இவ்வாறான பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் உற்பத்திகள் சிலவற்றை மார்ச் 31 முதல் இலங்கையில் உற்பத்தி செய்ய மற்றும் விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அதற்கு பதிலாக சூழலுக்கு உகந்த பொருட்களை அறிமுகப்படுத்தவும் சுற்றுச் சூழல் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment