திருகோணமலை, ஹபரணை பிரதான வீதியில் கொள்கலன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்து.
திருகோணமலை, ஹபரணை பிரதான வீதியில் கொள்கலன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து ரத்மலானை பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலனும், குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற லொறியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தின் போது அவ்வாகனங்களில் சென்ற மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு வாகனங்களும் விபத்துக்குள்ளாகியதையடுத்து பாலமொன்றினுள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் பயணம் செய்த லொறியின் சாரதியொருவரும், கொள்கலனில் பயணித்த சாரதியும் அதன் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment