Header Ads

test

வவுனியா நகரில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது இனந்தொியாத நபர்கள் தாக்குதல்.

வவுனியா நகரில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது இனந்தொியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ள நிலையில் அது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் பிற்பகல் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் நபர் ஒருவர் தொலைபேசியினை வவுனியாவில் உள்ள தனது நண்பரிடம் கொடுக்குமாறு நடத்துனரிடம் வழங்கி சென்றுள்ளார்.

பேருந்து வவுனியாவை சென்றடைந்ததும் தொலைபேசியை வழங்கியவரின் நண்பர் பேருந்து நடத்துனரிடம் தொலைபேசியினை வாங்கி சென்றுள்ளார். அவர் தொலைபேசியினை வாங்கி சென்ற பின்னர், அதே தோலைபேசியினை தருமாறு கூறி மற்றுமொரு பெண் நடத்துனரிடம் கேட்டபோது, அவர் ஏற்கனவே தொலைபேசியினை கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.

அதன்போது அப்பெண்ணுடன் வந்த சில நபர்கள் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியதுடன் நடத்துனரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று வவுனியா நகரை அண்டிய தோணிக்கல் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர் முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு தொலைபேசி கிடைத்து விட்டது தவறுதலாக நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று கூறி நடத்துனரை அவ்விடத்தில் விட்டு சென்றுள்ளார்கள்.

இந்நிலையில் காயமடைந்த நடத்துனரும் சாரதியும் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான இருவரும் வவுனியா மாவட்ட மருத்துவமனையில் சிகிற்சை பெற்றுவரும் நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



No comments