புகையிரதத்துடன் மோதுண்ட ஆட்டோ தீப்பற்றி எரிந்துள்ளது.
பெலியத்தை பகுதியில் இருந்து மருதானை சென்ற ரயில் இந்துருவ பகுதியில் ஆட்டோ ஒன்றை மோதியதில் குறித்த ஆட்டோ முற்றாக தீப்பிடித்து எரிந்துள்ளது.
இன்றுமாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆட்டோ சாரதி படுகாயமடைந்துள்ளார்.
பாதுகாப்பற்ற ரயில் கடவையை ஆட்டோ கடக்க முற்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. படு காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment