முல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கிய இளைஞன் உயிரிழப்பு.
முல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கிய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வவுனியா புதுக்குளம் பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற நான்கு இளைஞர்கள் குறித்த பகுதியில் நீராடிய நிலையில், நீரோட்டத்தில் அகப்பட்ட இளைஞனே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்த 29 வயதான இளைஞனே இதன்போது உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இளைஞர்கள் கரை சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், பிரதேச மீனவர்களும் கடற்படையினரும் இணைந்து சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலீஸர்ரு் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment