போதைப்பொருள் வியாபாரியான தாதா ஒருவர் டுபாயில் உயிரிழந்துள்ளதாக தகவல்.
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியான தாதா ஒருவர் டுபாயில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெசல்வத்த தினுகா என்பவரே டுபாயில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் இவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
எனினும் குறித்த நபர் 4 ஆண்டுகளுக்கு முன்பே நாட்டை விட்டு தப்பி ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment