Header Ads

test

காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதால் தனது கணவர் உயிரிழந்ததாக களுபோவில பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 கல்கிஸை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதால் தனது கணவர் உயிரிழந்ததாக களுபோவில பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 49 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கஞ்சாவுடன் கடந்த 18ஆம் திகதி இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் பிணையில் விடுதலை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும்,பிணையில் விடுதலையான குறித்த நபரை காவல்துறையினர் தாக்கியதாக அவரது மனைவி தெரிவித்தார்.

சம்பவத்தில் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் வைத்தியசாலையில் இவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை அடுத்து அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இவர் திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை இவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நாளை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இவரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

No comments