வாழைப்பழத்தால் வந்த வினை - ஒருவர் கொலை.
குருணாகல் பிரதேசத்தில் வாழைப்பழத்தின் விலை அதிகம் எனக்கூறி வன்முறையில் ஈடுபட்ட வாடிக்கையாளர் ஒருவர், வர்த்தக நிலையமொன்றின் ஊழியரை தாக்கிக் கொலை செய்துள்ளார்.
குருணாகல் நகரின் பெரகும்பா வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடந்த 20 ஆம் திகதி மேற்படி சந்தேகநபர் குறித்த வர்த்தக நிலையத்துக்கு சென்று வாழைப்பழத்தின் விலை தொடர்பில் விசாரித்துள்ளார்.
அதன்போது, பழம் ஒன்றின் விலை 30 ரூபாய் என வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அதன்போது, கோபமடைந்த வாடிக்கையாளர், வர்த்தக நிலைய உரிமையாளரையும் ஊழியரையும் தாக்கியுள்ளதுடன், போத்தலால் குறித்த ஊழியரை தாக்கிக் கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கொலைக்கு காரணமான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக குருணாகல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment