Header Ads

test

தாமரைப் பூ பறிக்கச் சென்ற ஆசிரியர் பரிதாபகரமாக குளத்தில் மூழ்கி பலி.

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் அந்தப் பகுதியில் உள்ள ஆலயத்தின் தேர் திருவிழாவுக்காக குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றுள்ளார்.எனினும் நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை என்பதால், அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தேடுதல் மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து, நீண்ட நேர தேடுதலின் பின்னர் குறித்த ஆசிரியரின் சடலம் குளத்தில் இருந்து பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியரான 33 வயதான பரந்தாமன் என்பவரே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் இராணுவத்தின் கடேட் படைப்பிரிவின் கெப்டன் தரத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments