தற்கொலை தேசமாகிறது தமிழர் தாயகம்!
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்து தாய் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் மீட்;கப்பட்டுள்ள நிலையில், ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆயினும் தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவந்திருக்கவில்லை.
ஏற்கனவே வவுனியாவிலும் கடந்த ஆண்டில் வறுமை காரணமாக பெண்ணொருவர் தனது இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதாகிய பெண்ணை சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் முற்படுத்தி மனநிலை பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், குழந்தையின் உடல்நிலை தொடர்பில் சட்ட மருத்துவ வல்லுநரின் அறிக்கையைப் பெறுவதற்கு வசதியாக இருவரையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்; உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த 24 வயதான பெண், அரபு நாட்டிலுள்ள தனது கணவனிற்கு அனுப்பவென பதிவு செய்த காணொளி ஒன்றே ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டிருந்தமையினை அடுத்து கைதாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment