Header Ads

test

சுருட்டால் பறிபோன உயிர் - முல்லைத்தீவில் சம்பவம்.

 முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தீயில் எரிந்து காயமடைந்திருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி குறித்த முதியவர் சுருட்டினை பத்தியுள்ளார். இதன்போது தவறுதலாக அவரது சாரத்தில் தீப்பற்றியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த முதியவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சங்கரப்பிள்ளை வேதாரணியம் என்ற 79 வயது முதியவரே உயிரிழந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பாக வவுனியாநகர திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், சடலத்தினை பிரேதபரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதன்பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.



No comments