நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று முற்பகல் அங்குரார்ப்பணம்.
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் www.slwpc.org என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று முற்பகல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நாடாளுமன்ற குழு அறை இலக்கம் 01இல் நடைபெற்ற இந்நிகழ்வில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவும் பங்கேற்றார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட ஒன்றியத்தின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Post a Comment