Header Ads

test

காவல்துறை ஆசீர்வாதம்:படையினர் வேட்டை!




இலங்கை காவல்துறை பங்களிப்புடன் நடந்து வரும் மரக்கடத்தல்காரர்களை இலங்கை படையினர் இலக்கு வைக்க தொடங்கியுள்ளனர்.

ஓமந்தை பகுதியில் வீதியால் பயணித்த வாகனமொன்றை படையினர் வழிமறித்த நிலையில் நிறுத்தாது சென்றமைக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து மரங்களை கடத்திச் சென்ற வாகனம் ஒன்றை வீதிக் கடமையில் நின்ற இராணுவத்தினர் மறித்துள்ளனர். எனினும் வாகனம் நிறுத்தாது சென்றமையால் அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக இராணுவ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் சேமமடு பகுதியைச் சேர்ந்த பிரசாத், சஜீபன் ஆகிய இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக செட்டிக்குளத்திலும் இத்தகைய துப்பாக்கி சூட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளமை தெரிந்ததே. 




No comments