Header Ads

test

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

 வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த சேகு இஸ்மாயில் சப்ராஸ் (மீனி) வயது – 35 என்ற இளைஞரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் தொழில் நிமிர்த்தம் சென்றவர் மாலை வரை வீடு திரும்பாத நிலையிலேயே உறவினர்கள் தேடுதல் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையிலேயே இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.





No comments