அதிக குற்றச்செயல்கள் பதிவாகும் கல்கிசை மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளில் ஒருவாரத்திற்கு விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதிக குற்றச்செயல்கள் பதிவாகும் கல்கிசை மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் இன்று முதல் ஒருவாரத்திற்கு விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு படையினரும், விசேட அதிரடிப்படையினரும், ஏனைய பிரிவுகளின் புலனாய்வு அதிகாரிகளும் இந்த சுற்றிவளைப்புகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளவர்கள், கப்பம் கேட்பவர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களையும் இலக்கு வைத்து இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment