கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவன் டெங்கு நோயினால் மரணம்.
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் ஒருவன் டெங்கு நோயினால் மரணித்துள்ளார்.
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவில் காதியார் வீதியை அண்டி வசிக்கும் பஜிர் நாதிர் எனும் மாணவனே மரணத்தைத் தழுவியுள்ளார்.
இவர் இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு முதல் தினமே டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment