வாகன விபத்தில் போக்குவரத்து பிரிவில் பணி புரிந்த காவல்துறை பரிசோதகர் பலி.
நிட்டம்புவ - கலகெடிஹேன சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் போக்குவரத்து பிரிவில் பணி புரிந்த காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாதையில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் காவல்துறை பரிசோதகரின் உந்துருளி மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாரவூர்தியின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நுகதெனிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.
Post a Comment