இராணுவ வாகனத்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி.
மினுவங்கொடை - நில்பனாகொட, ஹுரிகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று காலை காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.
இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோதி கவிழ்ந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் எதிரில் வந்த தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக இராணுவ வீரர்கள் சிலரை அழைத்துச் சென்ற பேருந்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
Post a Comment