Header Ads

test

இலங்கை அணியில் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸை மீண்டும் நியமிப்பதற்கு தீர்மானம்.

 இலங்கை அணியில் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸை மீண்டும் நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் சமிந்த வாஸுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை நாளை எடுக்கவுள்ளதாகவும், அதன் பின்னரே வாஸின் ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாவதற்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக, வேகப்பந்து பந்து பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் தனது பதவியிலிருந்து விலகியிருந்தார்.

அவர் பதவி விலகுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரே அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments